ரகசியம் - வானொலி நாடகம்

வானொலி நாடகம் என்பது கலையின் தனி வடிவம். ஊடகத்தின் ஒரு உட்பிரிவு. அதற்கு கதை வசனம் எழுதுவது ஒரு விதமான சவால். ஏனெனில் எல்லா விஷயங்களையும் வசனமாகவே சொல்ல வேண்டும்.

ஒரு கிராமம் என்பதை …… திரைப்படமாக, காட்சியாக சொல்லும் போது, 20 வினாடிகளில் ஒரு குளம், ஒரு வயல், ஒரு வீடு என படம் பிடித்து…. மிகவும் எளிமையாக சொல்லி விடலாம். அதே கிராமத்தை…. கதையாக எழுதும் போது, இரு பத்திகளில் வரிந்து வரிந்து எழுதி விடலாம்… ஆனால் ஒரு கிராமம் என்பதை வானொலியில் வெறும் ஒலியாக சொல்லும் போது…………. ஹூம்…. கொஞ்சம் கடினம் தான்…. 

வானொலி நாடகங்கள் ஒரு வித்தியாசமான தளம். அதன் நிறை குறை அறிந்து உணர்ந்து ரசித்தால் அது தரும் இன்பம் அலாதியானது. சென்னை வானொலி நிலையம் - தயாரித்த,  எனது கதை வசனத்தில் உருவான  'ரகசியம் - வானொலி' நாடகம் இதோ உங்களுக்காக 

’யானை டாக்டர்’ .... சிறுகதை - ஒலி வடிவில்


ஒரு சிறுகதை மாற்றம் கொண்டு வருமா….

வாசித்தவரின் வாழ்வு மாறுமா… சிந்தனை மாறுமா… கண்ணோட்டம் மாறுமா…. ஆக்கபூர்வமான ஒரு பார்வை கிடைக்குமா…. அவரது துக்கம் குறையுமா…. வாழ்க்கை மேம்படுமா…. புரிதல் இன்னும் ஆழமாகுமா….. சிந்தனை தாக்கம் கிடைக்குமா.. சீரிய செயல் திறன் கிடைக்குமா, மனவெழுச்சி கிடைக்குமா....


இதெல்லாம் சாத்தியமா….
ஆம், சாத்தியமே.

இலக்கியத்தின் பணி அது தானே….
நம் தாய் தமிழின் அணியும் அதுதானே…..

ஜெயமோகனின் யானை டாக்டர் சிறுகதை வாசித்த போது எனக்குள் அது எழுப்பிய ஆக்கபூர்வமான தாக்கத்தை எப்படி பங்கு வைப்பது….. ஒரு சிறுகதைக்கு…. ஏன் ஒலி வடிவம் தரக் கூடாது, என உருவாக்கியதே இவ் ஒலிச் சந்தி. வாசிப்பனுவத்துக்கு மேலாக, ஒலி வடிவில் அதே கதை கேட்கும் போது இன்னும் ஆழமாய் ஒரு உணர்வை உண்டாக்க முடியும் என நம்புவதால் இதோ இம்முயற்சி.

வீட்டின் மடிக்கணினியில், தன்னந்தனியனாய் இப்படைப்பை செய்தேன். எனவே குறைகள் நிறைவாய் இருக்கும். பொறுத்தருள்க.

கதை மாந்தர்களின் சம்பாஷணை வரும் போது, வெறுமனே வாசிக்காமல்… அவர்களே கதா பாத்திமாய் பேசுவது போல செய்தால் எப்படி என நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரமாக பேச என்னிடம் அத்தனை நண்பர்கள், அல்லது குரல்கள் இல்லை. எனவே நானே மிம்மிக்கிரி செய்து எல்லா குரல்களையும் உருவாக்கினேன்.

நானே பல குரல்களாய் இயங்கியது ஒரு காலத்தின் கட்டாயமே அன்றி, வேறொன்றுமில்லை. கருவியாய் நானும் இயங்கியிருக்கிறேன்...

இக்கதையின் அடி நாதமும்…. டாக்டர் கே… பணியாற்றிய மனத்தளமும்…. தங்களை வந்தடைந்தால் மகிழ்வேன்…



யானை டாக்டர் (சிறுகதை - ஒலி வடிவத்தில்) பகுதி - 1






யானை டாக்டர் (சிறுகதை - ஒலி வடிவத்தில்) நிறைவு பகுதி





சாம்ராட் அசோகர் (வானொலி நாடகம்)

சமீபத்தில் சென்னை வானொலியில் ஒலிபரப்பான சாம்ராட் அசோகர் சரித்திர நாடகத்தின் ஒலிச்சந்தி இதோ... கீழ் காணும் சுட்டியில் இணைக்கப்பட்டுள்ளது.

வி.எஸ். ராகவன், மற்றும் அனுபவம் நிறைந்த குழுவுடன் இணைந்து பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி.