சோற்றுக் கணக்கு – (சிறுகதை – ஒலி வடிவத்தில்)

மாற்றம்… மாற்றம்…. ஆக்கபூர்வமான மாற்றம்…

தனி மனித மாற்றம், சமூக மாற்றம்……….

இந்த இலட்சியங்களை இலக்கியம் சாதிக்குமா எனும் என் முயற்சியில் இதோ புதிய படைப்புடன் வருகிறேன்.

பசி…. !!! வருமைப்பசி….. 

நம்மில் அறிந்தவர்கள் குறைவே….அறிந்தவர்கள் பண்பட்டவர்கள்…. அறியாதவர்கள் அபாக்கியசாலி….ஆம்…. யேசு இதை சொல்கிறார்… ‘பசி தாகம் உள்ளவன் பேறு பெற்றோன்…’ என

ஔவையார் கூட … இடும்பை கூர் என் வயிறே… என சபிப்பார்….

பசி, நமக்கு உலகின் ஒரு பரிமாணம் காட்டும். நம்மை உருவாக்கும், உரமாக்கும்… அந்த உணர்வை ஆழமாய் சென்று உணர இதோ ஒரு வாய்ப்பு….

பசி எப்படி ஒரு தனிமனிதனையும் அவன் சார்ந்த குடும்பத்தையும் அதன் போக்கையும் தன்வயப்படுத்துகிறது என ஆழமாக சொல்லப்பட்ட கதை…
பாசம், அன்பு, நேசம் கூட பசியால் எப்படி மாறிப்போகிறது என சொல்லும் கதை….

வருமையை வென்றெடுப்பது எப்படி… என தீர்வும் ஆழமாய் சொல்லப்பட்டிருக்கிறது...இந்த அற்புத கதை தந்த ஜெமோவுக்கு நன்றி கூறி, இதை கேட்பவருக்கு ஒரு அற்புத அனுபவம் கிடைக்க ஆசைப்படுகிறேன்…

அன்புடன்

லாரன்ஸ் பிரபாகர்

சோற்றுக் கணக்கு - பகுதி  1 




சோற்றுக் கணக்கு - பகுதி  2  







18 comments:

Unknown said...

பல வருடங்களுக்கு முன் ரேடியோவில் ஒலிச்சித்திரம் கேட்டது போல் இருந்தது.... அருமை.... கதை சற்றே அங்குமிங்கும் அலைபாய்வது போல் இருந்தாலும் ஒரு தாய்க்கு இணையாக கெட்டில் சாய்பை உருவகப்படுத்திவிட்டு, இறுதியில் மனைவி கூட்டி வந்தேன் என முடித்திருப்பது திரும்பவும் அவரின் கைகளில் உணவு உண்ணப்போவது இல்லை என்றே எனக்குப் புரிகிறது... அப்படியென்றால் மனைவி வந்துவிட்டால் அன்னையின் நிலை அவ்வளவுதானா...? (முடிவு தடுமாற்றம்)

cdhurai said...

yeh..makka nalla irunthuchuley.... innum neraya ithu mathiri pannanumley...

appuram makka umma life storyyaum ithu mathiri sollungaley...

Sahib mathiri neraya peraya peru ovvaruvarin valkkaigyil...veru veru koonathilll...

cdhurai..

JoeBasker said...

அருமையான படைப்பு !! கேட்கக் கேட்கத் தித்திக்கிறது. தெளிவான நல்ல தமிழ் உச்சரிப்பு.. உணர்ச்சிமிக்க வெளிப்பாடு.. குரலின் ஏற்ற இறக்கங்கள்.. சீரிய முயற்ச்சியில் வெளி வந்த பல குரல் திறமை.. இப்படி பாராட்டத்தக்க பல பரிமாணங்கள். தலை வணங்குகிறேன்..

பிரபாகர் said...

மிக்க நன்றி.... திரு Vas Charles ////கதை சற்றே அங்குமிங்கும் அலைபாய்வது போல்..../////

மிக ஆழமான ஒரு கருத்தை சொல்கிறீர்கள்...

1.கெட்டில் சாய்ப் - சாப்பாட்டு மணம்
2. வியாபார முறை
3. அவரது குணம்...

பின் இன்னொரு கதாபாத்திரத்தின் மூலம்...

1. திருவனந்தபுரம் வருதல்
2. மாமி வீட்டில் துன்பம்
3. வெளி வருதல்
4. பசி
5. கெட்டில் சாய்ப் உணவு
6. வேலை கிடைக்கும் வரை சாப்பாடு
7. வேலை கிடைத்ததும் சில மாறுதல்கள்

ம்... கதை ஃப்ளோவுக்காகவே நீண்ட நேரம் செலவிட்டேனே... சரியில்லையோ.. இன்னும் ஆழமாய் சென்று பார்க்கிறேன்....

என்ன.... ஒரு பெரிய நாவல்.... அதனாலேயே பிரச்சனை...

//// இருந்தாலும் ஒரு தாய்க்கு இணையாக கெட்டில் சாய்பை உருவகப்படுத்திவிட்டு, இறுதியில் மனைவி கூட்டி வந்தேன் என முடித்திருப்பது திரும்பவும் அவரின் கைகளில் உணவு உண்ணப்போவது இல்லை என்றே எனக்குப் புரிகிறது... அப்படியென்றால் மனைவி வந்துவிட்டால் அன்னையின் நிலை அவ்வளவுதானா...? (முடிவு தடுமாற்றம்//////

இது... நான் இதுவரை யோசிக்காத ஒரு விஷயம்...

வாழ்க்கை முன்னோக்கி செல்கிறது என குறிப்பிடப்பட்ட ஒரு வரி, அவரையும் அவனையும் அப்பெண்ணையும் ஒரு புள்ளியில் இணைத்தது எனக்கே ஒரு பாடம்...

கேட்டுவிட்டு கருத்து சொன்ன தங்கள் அன்புக்கு மிக்க நன்றி...

பிரபாகர் said...

மிக்க நன்றி செல்லா...

நிச்சயம் செய்வோம் செல்வா....

தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி..

பிரபாகர் said...

மிக்க நன்றி... JoeBasker

தங்கள் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு தலைவணங்கி தங்கள் அன்புக்கு நன்றிகள்

அன்புடன்

Unknown said...

தங்கள் குரல் வளம் அருமை... கணீரென்று வந்து விழும் வார்த்தைகள் கதையை கேட்க துண்டுகிறது என்பதும் உண்மை... அதிலும் பல குரல் மன்னனாக மிளிர்ந்திருக்கிறீர்கள்.... (ஒரு படைப்பை முதலில் கேட்கும்போது குறைகள் தெரியும்.... பின் மீண்டும் கேட்கும் போது நிறைகள் தெரியும்.... முன்பதிவு குறைகள்... பின்பதிவு நிறைகள்....)*** தங்கள் முயற்சிக்கு மீண்டும் வாழ்த்துக்கள் ...

பிரபாகர் said...

மிக்க நன்றி... Vas Charles தங்களின் கருத்துக்கு.........

1. இந்த படைப்பு... மீண்டும் மீண்டும் கேட்கும் போது சில கதவுகள் திறக்கும்...

2. மேலும் நான் ஒரு கருவியே... இப்படைப்பு நல்லதை விதைக்க வேண்டும், ஒரு தனி மனித... சமூக மாறுதல் ஏற்படுத்த வேண்டும்.. எனும் எண்ணம் மட்டுமே எனது....

3. என் பல குரல்....!!! ஆடாசிட்டி எனும் மென்பொருளின் மேஜிக் இது... என் கையில் ஒன்றுமே இல்லை...

‘ நான் உனக்கு எதுக்கு சும்மா சோறு போடணும்.. எனக்கு ரெண்டு பெண் மக்க இருக்கு......’

என சொல்லும் தாயின் கோவம்... கோணம், அவள் பக்கத்து நியாயம் இதை உள் வாங்குகிறேன்... அவள் சார்ந்திருக்கும் குமரி மாவட்ட மொழியை முயலுகிறேன்...

அவ்வளவுதான்...

அதே பெண்... புருஷன் இறந்து.... வாழ்வு குரூரமாய் அவள் மீது பாயும் போது... கூலிக்கு நெல் குத்தி, உடல் தளர்ந்து....

மருமவன் சொல்லும் வேலை கிடைத்த செய்தியில்.....

‘நல்லாயிரு... நல்லாயிருடே...’

என்பதில் பண்பட்டதையும், உடல் சோர்வையும், பொழப்பு நடக்கட்டும்... என கலவையான உணர்வை கொண்டு வர முயன்றேன்....

இதில் ஏதேனும் நல்லதாக இருந்தால்.. என் ஆசான் திரு. முல்லை எம். பெர்க்மான்ஸ் அவர்களையே சாரும்...

வானொலி நாடகத்தில்... அப்படி ஒரு பயிற்சி தந்தவர்...

ஒரு நாள்....கிறிஸ்த்துவ பாதிரியாராய் பாந்தம் காட்டச் சொல்லுவார்...

அடுத்த நாள்.. சிலம்ப வாத்தியாராய்... கள்ளு குடித்து விட்டு சிலம்பம் சுற்ற சொல்லுவார்....

அதற்கும் அடுத்த நாளில், இளவட்டமாய் குறும்பு செய்ய வைப்பார்...

இப்படி அவர் என்றோ பயிற்று வைத்த பாடம் இன்று பலனளிக்கிறது....

இந்த படைப்பு.... படைப்பின் விதம்...அந்த இயல்பை தாண்டி... சொல்லும் கருத்துக்கள் நம் சமூகத்தில் பரவினால்...

ஆம்... ஏழ்மையை ஏளனம் செய்யும் ஒரு மனப் பாங்கு இன்னும் இருக்கத்தானே செய்கிறது...

அல்லது அட்லீஸ்ட்... சோசியல் ஸ்ட்டேஸ் - சை... வைத்து உறவை தீர்மானிக்கும் அபாக்கியகரமான நிலை நம்மிடம் நிறைந்தும் இருக்கிறதே...

வாழ்வின் பரிமாணங்கள் சரிவர புரியப்பட்டால்... ஒரு மிகப்பெரிய மாறுதல் வரும்...

வெண்பூ said...

அருமை பிர‌பாக‌ர்.. ஜெமோ கதைக‌ளில் என‌க்கு மிக‌ மிக‌ப்பிடித்த‌ க‌தை இது.. ப‌டிக்கும்போது இருந்த‌ அதே உண‌ர்வு உங்க‌ குர‌லில் கேக்கும்போதும் இருந்த‌து. ந‌ன்றி..

இளங்கோ said...

சோற்றுக் கணக்கு கதையை ஏற்கனவே படித்திருந்தாலும், நீங்கள் சொல்லிக் கேட்பது அருமை. சின்ன வயதில் ரேடியோவில் கதைகள் கேட்டது நினைவுக்கு வந்தது. நன்றிகள் பல.

பிரபாகர் said...

மிக்க நன்றி.... திரு. வெண்பூ...

தங்கள் அன்புக்கும் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி....

பிரபாகர் said...

ரொம்ப மகிழ்ச்சி... திரு. Elango

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....

உங்கள் மற்றும் வெண்பூவின்...

நன்றி எனும் வார்த்தை எனக்குள் எங்கோ தட்டியது...... அந்த உணர்வு.... தேங்க்ஸ் என நீங்கள் சொன்னது என் இதயத்துக்கு கேட்டது.....

ரொம்ப உணர்வு பூர்வமாக உணர்ந்தேன்... நம்மை ஒன்றிணைத்த ஜெமோவின் கதைக்கும், தமிழுக்கும் நன்றி....

அன்பு பரிமாறிக் கொள்ளப்படுவதிலும் உணர்வதிலும் ஒரு புனிதம் இருக்கிறது...

தேங்க்ஸ்... நண்பா....

பிரபாகர் said...

இன்று என்னவென்று தெரியவில்லை.... திடிரென்று ... நம் வலைத்தளத்தின் டிராபிக் கண்ணா பின்னாவென ஆகி இருக்கிறது...

மூன்று நாட்களுக்கு முன் 0... அதற்கு முன் 0..... ஆனால் நேற்று 89 இன்று 190....

யாரோ நல் இதயம்... நம் தளம் குறித்து... பகிர்கிறது என தெரிகிறது....

எட்டுத்திக்கும் சென்று ஆக்கபூர்வமாய் சில சிந்தனைகளை விதைத்து நம் இலக்கியம் நம்மை இலகுவாக்கட்டும்...

vasan said...

ரொம்பவும் ரசித்து கேட்டோம்.

தங்கள் பணி மேலும் சிறக்க

வாழ்த்துக்கள்


பிரபாகர் said...

//// மிக்க நன்றி... திரு. vasan.///

ரசித்து கேட்டோம்.... எனும் சொல்பதம் ரொம்ப பிடித்தது...

படித்தவுடன் என் மனதினுள் கேள்வி..

அது யாராயிருக்கும் நண்பர்களா அல்லது, அலுவலக உடன் பணி புரிபவர்களா.. அல்லது குடும்பமா....

எதுவாயிருந்தாலும் இப்படி ஒரு சம பகிர்வு இருக்கும் குழுமத்தில் இருப்பது மிகவும் ஆரோக்கியமானது... நம்மை வெகுவாய் பலப்படுத்துவது...

ரொம்ப சந்தோசம்... உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றிகள்...

sarpalan said...

Glad to hear your voice in the Internet.

I used to listen to Trichy radio during my childhood and your voice took me back to those sweet memories.

Story narration is an art, and this is the best method to communicate the stories in audio form.

Keep up your good work sir !

manoharan said...

excellet sir..pls try next story also..we are waiting............

Murugesan said...

Excellent story. I lost touch with my tamil stories long back.Because Today's writers are not appealing to me. That made me to resort to English fiction besides others. I happen to hear this story because of my brother who is now in US sent this story and I heard it. In olden days we used to read all stories of Jeyakanthan,Janakiraman,Puthumaipithan and others and discuss hours together. He might have decided to send this to me due to our taste.After hearing this I may opt for again Tamil stories. Mika arumaiyana story.Is it true there was actually Kettle saibu kadaiin salai Bazaar?