’யானை டாக்டர்’ .... சிறுகதை - ஒலி வடிவில்


ஒரு சிறுகதை மாற்றம் கொண்டு வருமா….

வாசித்தவரின் வாழ்வு மாறுமா… சிந்தனை மாறுமா… கண்ணோட்டம் மாறுமா…. ஆக்கபூர்வமான ஒரு பார்வை கிடைக்குமா…. அவரது துக்கம் குறையுமா…. வாழ்க்கை மேம்படுமா…. புரிதல் இன்னும் ஆழமாகுமா….. சிந்தனை தாக்கம் கிடைக்குமா.. சீரிய செயல் திறன் கிடைக்குமா, மனவெழுச்சி கிடைக்குமா....


இதெல்லாம் சாத்தியமா….
ஆம், சாத்தியமே.

இலக்கியத்தின் பணி அது தானே….
நம் தாய் தமிழின் அணியும் அதுதானே…..

ஜெயமோகனின் யானை டாக்டர் சிறுகதை வாசித்த போது எனக்குள் அது எழுப்பிய ஆக்கபூர்வமான தாக்கத்தை எப்படி பங்கு வைப்பது….. ஒரு சிறுகதைக்கு…. ஏன் ஒலி வடிவம் தரக் கூடாது, என உருவாக்கியதே இவ் ஒலிச் சந்தி. வாசிப்பனுவத்துக்கு மேலாக, ஒலி வடிவில் அதே கதை கேட்கும் போது இன்னும் ஆழமாய் ஒரு உணர்வை உண்டாக்க முடியும் என நம்புவதால் இதோ இம்முயற்சி.

வீட்டின் மடிக்கணினியில், தன்னந்தனியனாய் இப்படைப்பை செய்தேன். எனவே குறைகள் நிறைவாய் இருக்கும். பொறுத்தருள்க.

கதை மாந்தர்களின் சம்பாஷணை வரும் போது, வெறுமனே வாசிக்காமல்… அவர்களே கதா பாத்திமாய் பேசுவது போல செய்தால் எப்படி என நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரமாக பேச என்னிடம் அத்தனை நண்பர்கள், அல்லது குரல்கள் இல்லை. எனவே நானே மிம்மிக்கிரி செய்து எல்லா குரல்களையும் உருவாக்கினேன்.

நானே பல குரல்களாய் இயங்கியது ஒரு காலத்தின் கட்டாயமே அன்றி, வேறொன்றுமில்லை. கருவியாய் நானும் இயங்கியிருக்கிறேன்...

இக்கதையின் அடி நாதமும்…. டாக்டர் கே… பணியாற்றிய மனத்தளமும்…. தங்களை வந்தடைந்தால் மகிழ்வேன்…யானை டாக்டர் (சிறுகதை - ஒலி வடிவத்தில்) பகுதி - 1


யானை டாக்டர் (சிறுகதை - ஒலி வடிவத்தில்) நிறைவு பகுதி

41 comments:

பிரகாஷ் சங்கரன் said...

பிரபாகர், முதன் முறையாக இப்படி ஒலிவடிவத்தில் கதையை நிகழ்த்துவதற்கு முயல்கிறீர்களா?? தேர்ந்தெடுத்த கதையும் அருமியானது. அருமையான முயற்சி. நல்ல குரல் வளம் உங்களுக்கு, ஆளுக்குத் தகுந்த மாதிரி குரலை மாற்றியும், ஏற்ற இறக்கங்களுடனும் பேசியதும் நன்று. வாழ்த்துக்கள்.

. said...

நன்றி திரு. பிரகாஷ் சங்கரன். தங்கள் ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கும், மனம் நிறைந்த பாராட்டுக்களுக்கும்....

Saran said...

நன்றாக உள்ளது பிரபாகர். சிறப்பாக உள்ளது. உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் பிராபகர். இதை youtube ல் போட்டால் மற்றவர்களுடன் பகிர வசதியாக இருக்கும். மேலும் நிறையபேரை சென்றடையும். நன்றி.

Saran said...

நன்றாக உள்ளது பிரபாகர். சிறப்பாக உள்ளது. உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் பிராபகர். இதை youtube ல் போட்டால் மற்றவர்களுடன் பகிர வசதியாக இருக்கும். மேலும் நிறையபேரை சென்றடையும். நன்றி.
சரவணன்

. said...

மிக்க நன்றி திரு.சிங்கா அவர்களே... தாங்கள் சொன்னதுபோல் Youtube ல் இணைத்துள்ளேன்...

http://www.youtube.com/watch?v=kKTgV8zYFsU&feature=youtu.be

http://www.youtube.com/watch?v=PpUgzbr5DiU&feature=youtu.be

Sabarinathan Arthanari said...

நல்ல முயற்சி தொடருங்கள்
நன்றி

Anonymous said...

டாக்டர் குரலும் பணியாளர் குரலும் ஒரே போல உள்ளன. வாசிப்பு ஆல் இந்தியா ரேடியோவின் நாவல் வாசிப்பு தொனியில் (புதினப் பக்கங்கள் இத்தியாதி) இருப்பது சற்று அலுப்பு.

Anonymous said...

டாக்டர் குரல் கம்பீரமாக இருக்க வேண்டும்; இதில் ஆணா, பெண்ணா என்று கூட அனுமாணிக்க இயலாமல் உள்ளது. உங்கள் இயல்பான குரலையே உபயோகித்திருக்கலாம்.

Anonymous said...

The fascist undercurrent of the narrative is highly disturbing . The protagonist will kill humans to save forest and animals in their pristine glory. The self-righteousness is repulsive and the romanticism is hideous.

There are enough scientifically valid reasons to save forests and animals without attaching any romantic nonsense to it.

Saravanan

guna said...

very good intersting.

jagan said...

Great Job Prabhakar. It remembers me the days i listened to novels broadcasted in Radio. you must have worked hard to carry this out. My best wishes :)

warmly
Jagananth

மு.வேலன் said...

அருமை! நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

மு.வேலன் said...

அருமை. நல்ல முயற்சி. வாழ்த்துகள்!

. said...

மிக்க நன்றி.. மு.வேலன்

தங்கள் மனம் நிறைந்த பாராட்டுக்களுக்கு பணிவான வணக்கங்களும் நன்றிகளும்...

. said...

Thank you so much Mr.Jagananth sir,

///// you must have worked hard to carry this out////

i agree, yes it was challenging, however very interesting.... your reference to the efforts make me feel good and thanks for the same....

. said...

Thank you Mr.Guna,

for your encouraging words and appreciation. i remain delighted to hear your views...

. said...

Thank you Mr.Saravanan for your valuable comment.

my sincere apologies for sounding 'Authoritative Facist' view while offering my commentary.

I fully agree and understand, to your views on self-righteousness and human free will.

while i sincerely feel sorry for the overtone in my vocal delivery, i shall take care in the future, to add the other dimension........... so that a balance is achieved in dual dimension....

thanks for the valid input....

. said...

///// டாக்டர் குரல் கம்பீரமாக இருக்க வேண்டும்; இதில் ஆணா, பெண்ணா என்று கூட அனுமாணிக்க இயலாமல் உள்ளது. உங்கள் இயல்பான குரலையே உபயோகித்திருக்கலாம் //////

இருவர் இது குறித்த கருத்துக்களை சுட்டி காட்டியிருக்கின்றனர். அவர்களுக்கு நன்றிகள்...

எனக்கு மிக நெருக்கமானவர் கூட இதையே சொன்னார்....

டிரைவர், பியூண் எல்லாம், ஒக்கே…………. ஆனால், டாக்டர் கே…. குரலாய் நீங்கள் பேசும் போது ஏன் இப்படி ஒரு குரலமைப்பையும், உச்சரிப்பையும், ஸ்டைலையும் தேர்ந்தெடுத்தீர்கள்…

என காட்டமாக கேட்டார்…. இன்னும் கம்பீரமாய், இன்னும் மிடுக்காய் ஏன் பேசியிருக்க கூடாது….

சட்டென பதில் சொல்லாமல் கொஞ்சம் அதிர்ந்து, ஆழமாய் சென்று, பின் சில கணங்களுக்கு பின்னர் இப்படி சொன்னேன்…

ம்…புரியுது. மிக நல்ல கேள்வி, இது வரைக்கும் யோசிக்கல, இப்பத்தான் இத பத்தி யோசிச்சேன்….

கொஞ்சம் ஓஷோ, கொஞ்சம் ஸ்ரீஸ்ரீ, கொஞ்சம் எஸ்.பி.பி. கொஞ்சம் எம்.ஆர்.எஸ், கொஞ்சம் பெர்க்மான்ஸ்….(இருவரும் என் நாடக நடிக நண்பர்கள்) என தாக்கங்கள் கொண்ட குரல் மற்றும்
அணுக்கங்களின் வடிவம் அது.

யானை டாக்டர்… டாக்டர் கேயின் ஒரு புகைப்படம் மாத்திரமே எனக்கு கிடைத்தது. அவரை நேரில் பார்க்கவோ, அல்லது உரையாடவோ எனக்கு வாய்ப்பு இருந்திருக்கவில்லை.

சில நிமிடங்கள் ஆழ்ந்து அந்த புகைப்படத்தை பார்த்த போது, எனக்குள் தோன்றிய ஏதோ ஒன்று இப்படி, ஒரு முடிவு எடுக்க செய்தது…

அதை என்னவென்று விளக்க எனக்கு தெரியாது. மூன்று நான்கு விதமாக நான் பேசிப் பார்த்தேன்... அப்போது இப்போது இருக்கும் இந்த வடிவமே நல்லது என தோன்றியது....

இதுதான் சரியா இருக்கும் என ஒரு உணர்வு. அதன்படி நடந்து விட்டேன்…

மிச்சபடி கூடுதல் தகவல் இல்லையென்றேன்…

ம்.... மிக பெரிய தவறாக கூட இது இருக்கலாம்... அப்படி ஏதேனும் நிகழ்ந்து இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்....

ஒரு கதையாய் வாசிக்கும் போது, வாசகர்கள் அவர்களுக்கு தோதான அவர்களுக்கு பிடித்த உருவத்தையும் குரலையும் குரல் அணுக்கத்தையும் கொள்ளுதல் நடக்கும்.... ஆனால் ஒலி அல்லது ஒளி வடிவம் கொடுக்கும் போது..... இது மிகப்பெரும் சோதனை....

நான் முடிவெடுத்த பிண்ணனியும், அதன் சிறிய விளக்கங்களும் இதை உணர்த்தும் என நம்புகிறேன்....

Anonymous said...

arumaiyaana muyarchi sir..vaaltthukkal..innum thodarnthu nalla kadhaigalukku oli vadivam kodungal..

Anonymous said...

very nice.love to listen more

naga said...

Dear Prabhakar,
Your idea is good. I know its not new, but the outcome is interesting. In the top you have written saying that you dont have much friends to record different voices, I am interested in giving one of the voices in ur future projects.Please let me know.

Cheers
Naga

naga said...

Interesting try prabhakar. If u need an additional voice, Im interested in giving voice for one of ur future projects.Please let me know.

muthukumaran said...

அருமையான விவரணை. உங்கள் குரல் கம்பீரமாக உள்ளது.

. said...

மிக்க நன்றி.... Muthukumaran Devadass

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும். தங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

. said...

அன்பிற்குரிய நாகா அவர்களுக்கு, மிக்க நன்றி. பங்கு கொள்கிறேன் என தாங்கள் சொன்னது மிக்க மகிழ்ச்சி. நிச்சயம் நாம் இணைந்து செயலாற்றுவோம்.

. said...

மிக்க நன்றி... திரு. Sabarinathan Arthanari.

தங்கள் ஊக்குவிக்கும் வார்த்தைகள் புது தெம்பை தருகின்றன. நிச்சயம் நல்ல சிந்தனைகளை விதைக்கும் இது போன்ற முயற்சிகள் முனைவோம்...

இந்த முயற்சிக்கு வரும் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் என்னை மகிழ்விக்கின்றன. நான் ஒருவன் அல்ல............ நாம் எனும் சக்தி இருப்பதாகவே எனக்கு படுகிறது.

கோஷம் வேண்டாம், கொடியும் வேண்டாம்............. சிறு துளி சிந்தனை போதும்....

மிகப் பெரிய சமூக மாறுதல் மனங்களில் விளையும் என ஆழமாய் நம்பும் என் சிந்தனை வலுப் பெருகிறது...

மிக்க நன்றி....

Divya Raju said...

Wonderful narration, strong tone, amazing voice and

my imagination just opened up like a movie as you narrated as if there is a cold place in a mountain top , where there s a constant drizzle of rain,

especially when the door is knocked and from there I could travel along with your voice... Wonderful experience,

why dont we shoot a short film on this?

. said...

Thank you so much Divya....

for your motivating words... i feel very good on your experience and sharing about 'travelling in the story'

இலக்கியத்தின் பணி அது தானே….
நம் தாய் தமிழின் அணியும் அதுதானே…

regarding the short movie... sure, we shall work on the same.

கே.ஜே.அசோக்குமார் said...

அருமையாக இருக்கிறது நன்றி திரு.Prabakar,
இந்த கதை கடைசியில் யானைவந்து சிகிச்சை பெற்று செல்வதாக முடியும். அதை சேர்க்கவில்லையே ஏதும் காரணம் உண்டா?

. said...

மிக்க நன்றி திரு. கே.ஜே.அசோக்குமார்

//// இந்த கதை கடைசியில் யானைவந்து சிகிச்சை பெற்று செல்வதாக முடியும். அதை சேர்க்கவில்லையே ஏதும் காரணம் உண்டா///////////////

மிக நுணுக்கமான தங்கள் பார்வைக்கு நன்றி....

அதிலும் தாங்கள் குறிப்பிடும் ஒரு பகுதி மிகவும் பிரமிப்பானது.

ஒன்றரை வருடத்துக்கு முன் முதுமலைக்கு சென்றிருந்த போது, டாக்டர் கே அளித்த சிகிச்சையை ஞாபகத்தில் வைத்து ஒரு குட்டி யானை.... அத்தனை தூரம் கடந்து வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளும்....

எப்படி............ எப்படி......... எப்படி........

மோப்பமா... ஹூம்...ஹூகும்...... ஏதோ ஒன்று ........... நாம் அறியாதது....

யானை டாக்டர் கதையின் மொத்த பக்கங்கள் 49.

காகித வடிவத்தை காற்றின் வடிவமாக்கிய போது, சில தகவல்களை சின்னஞ்சிறு வார்த்தைகளில் முடிக்க வேண்டியதாகி விட்டது.

இந்த ஒலி வடிவம் கேட்டு பிடித்து, முழு கதையையும் படிக்க சொல்லி விண்ணப்பம் வைப்போம். இக்கதை வலையில் இலவசமாக கிடைக்கிறது.

இவ் ஒலி வடிவம் கேட்டு, விரிவான கதைக்கு காகிதத்துக்கு செல்வார்கள் என நான் நம்புவோம்...

தங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

JoeBasker said...

ஆனந்தக்கண்ணீரை வரவழைக்கும் அழகான படைப்பு. உங்கள் குரலில் தான் எத்தனை வளமை.. !!

உங்களுக்குள் ஒரு பல குரல் மன்னன் ஒளிந்திருப்பது இத்தனை நாள்களாய் தெரியாமல் போய் விட்டதே ! நிறைய இடங்களில் இது உங்கள் குரல் தானா என்று சந்தேகிக்கும் அளவுக்கு அப்படி ஒரு வளம்.

மிகவும் கடினப்ப்பட்டு இந்த படைப்பை படைத்திருக்கிறீர்கள். பின்னணி ஓசைகள், இசைத்தேர்வு, உணர்ச்சி மாறுதல்கள், உயர்தர தமிழ் உச்சரிப்பு, குரலின் ஏற்ற இறக்கங்கள், சுருக்கப்பட்ட கதையின் சிதையாத மையக்கரு, தளராத தன்னம்பிக்கை, தனிச்சிறப்பு மிக்க தெந்தமிழ்நாட்டு பேச்சு வழக்கு முறை,.. இப்படிப் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறீர்கள். இப்படைப்பின் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் ! பாராட்டுக்கள் !!

. said...

மிக்க நன்றி திரு. JoeBasker, தங்களின் ஆழமான கருத்துக்களுக்கு நன்றிகள்.

//// நிறைய இடங்களில் இது உங்கள் குரல் தானா என்று சந்தேகிக்கும் அளவுக்கு அப்படி ஒரு வளம்.////

எனக்குமே கூட இப்படித்தான் இருக்கிறது.‘அடாசிட்டி’ எனும் அற்புதமான ஒரு மென்பொருளின் துணையாலே இது நிகழ்ந்தது... குரல்களின் ‘பிட்ச்’ மாற்றி அதிரடியாய் செயல்படுகிறது.

/// மிகவும் கடினப்ப்பட்டு இந்த படைப்பை படைத்திருக்கிறீர்கள். பின்னணி ஓசைகள், இசைத்தேர்வு, உணர்ச்சி மாறுதல்கள், உயர்தர தமிழ் உச்சரிப்பு, குரலின் ஏற்ற இறக்கங்கள், சுருக்கப்பட்ட கதையின் சிதையாத மையக்கரு, தளராத தன்னம்பிக்கை, தனிச்சிறப்பு மிக்க தெந்தமிழ்நாட்டு பேச்சு வழக்கு முறை,.. இப்படிப் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறீர்கள். இப்படைப்பின் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் ! பாராட்டுக்கள் !/////

தங்கள் அன்புக்கும் ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி...

தமிழ்த்தோட்டம் said...

அருமையான் முயற்சி பாராட்டுக்கள் தொடருங்கள்

. said...

மிக்க நன்றி.... தமிழ் தோட்டம்

தங்கள் கருத்துக்கும் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கும்...

gemjohny said...

உங்கள் புதிய முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பல குரல்கள் பெரும் நேர்த்தியாக உள்ளது, உங்கள் முயற்சி தொடருட்டும். இந்த கதைகள், 10 நிமிடத்துக்குள் இருந்நால் இன்னும் சுவாரஸ்யாமாக இருக்கும்.

. said...

மிக்க நன்றி.... திரு. gemjohny....... தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கும்...

//// இந்த கதைகள், 10 நிமிடத்துக்குள் இருந்நால் இன்னும் சுவாரஸ்யாமாக இருக்கும்.////

மிக...மிக.... நுட்பமான ஆலோசனை. நான் பெரிதும் மதிக்கும் ஒருவர் கூட இதையே தான் சொன்னார். முயற்சிக்கிறேன்... மிக்க நன்றி...

Anonymous said...

hey...this moment only ,i heard the story.tks.i enjoyed it fully.keep it going.kudos to u....

Ponnambalam kalidoss ashok said...

congrats on great work..அற்புதமான ஆழமான ஒரு புதையல் . யானை வலியுடன் , வலுவான , வாழ்வியல் உண்மைகளை புட்டு வைத்த ஒரு ஆன்மிக அலசல், குரல் எற்றம், இறக்கம் அழகு . புற உலகை தெரிதல், அறிதல்,புரிதல், பின் ஒன்று இணைதல் என்று அக உலகை நோக்கிய ஒரு பயணம் . இங்கு காடு என்பது நம் மனமும் ,பல்வேறு இன்னல்களை நாமே வரவழைத்து மனதை அலைகழித்து பிறவியின் பயன் பெறாது வாழ்தல் என்ற அலகுகளை யானை வழியாகவும் காட்டின் பிரச்சினைகள் மூலமாகவும் தெளிவாக புரிய வைத்த ஜெயமோகனுக்கும் உங்களுக்கும் நெஞ்கம் நிறைந்த நன்றிகள்...ஆங்கில இலக்கியம் ,தமிழ் இலக்கியம், ஆன்மிகம் , தத்துவம், உயிர்களின் சம நிலை என்று , என்ன ஒரு அற்புத உலகம்..!!!

வல்லிசிம்ஹன் said...

திரு பிரபாகர் அருமையாக ஒலியோடு டாக்டருன் எங்களை இணைய வைத்துவிட்டீர்கள். நானும் அவர் புகைப்படத்தத்தான் பார்த்திருக்கிறேன். உங்கள் குழைவான் குரல் வடிவு அவருக்கு மிகவும் பொருந்தியது. அவர் அப்படித்தான் பேசி இருக்கவேண்டும். என்னவென்று தெரியாத பல உணர்வுகள் தோன்றுகின்றன. இன்னும் பலவித படைப்புகளை ஒலியில் கொண்டு வர முயற்சியுங்கள் ஒன் மேன் ஷோ இவ்வளவு பிரமாதமாக அமைந்தது எனக்கு இதுதான் முதல் தடவை. மனம் நிறைந்த நன்றிகள். யானைகளும் நன்றி சொல்லி இருக்கும்.

. said...

நன்றி... நன்றி... மிக்க நன்றி... திரு வல்லிசிம்ஹன்

தங்கள் அபரிமிதமான பாராட்டு என்னை மேலும் இது போல் படைக்க தூண்டுகிறது...

//// திரு பிரபாகர் அருமையாக ஒலியோடு டாக்டருன் எங்களை இணைய வைத்துவிட்டீர்கள். நானும் அவர் புகைப்படத்தத்தான் பார்த்திருக்கிறேன். உங்கள் குழைவான் குரல் வடிவு அவருக்கு மிகவும் பொருந்தியது. அவர் அப்படித்தான் பேசி இருக்கவேண்டும். //////

மிக்க நன்றி.. யானை டாக்டர்… , டாக்டர் கேயின் ஒரு புகைப்படம் மாத்திரமே எனக்கு கிடைத்தது. அவரை நேரில் பார்க்கவோ, அல்லது உரையாடவோ எனக்கு வாய்ப்பு இருந்திருக்கவில்லை. சில நிமிடங்கள் ஆழ்ந்து அந்த புகைப்படத்தை பார்த்த போது, எனக்குள் தோன்றிய ஏதோ ஒன்று இப்படி, ஒரு முடிவு எடுக்க செய்தது… அதை என்னவென்று விளக்க எனக்கு தெரியாது. மூன்று நான்கு விதமாக நான் பேசிப் பார்த்தேன்... அப்போது இப்போது இருக்கும் இந்த வடிவமே நல்லது என தோன்றியது..

கொஞ்சம் ஓஷோ, கொஞ்சம் ஸ்ரீஸ்ரீ ரவி ஷங்கர் , கொஞ்சம் எஸ்.பி.பி. என தாக்கங்கள் கொண்ட குரல் மற்றும் அணுக்கங்களின் வடிவம் அது.

ரசித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி...

//// என்னவென்று தெரியாத பல உணர்வுகள் தோன்றுகின்றன. //////

இந்த வரி வாசிக்கும் போது எனக்கு கண்கள் முட்டி கொண்டு வந்தன.. உள்ளுக்குள் ஒரு தேம்பல்...

இங்கனம் ஒரு அனுபவம் உங்களுக்கு கிடைத்தது.. அறிந்து மிக்க மகிழ்ச்சி ... மிக்க மகிழ்ச்சி ...

//// இன்னும் பலவித படைப்புகளை ஒலியில் கொண்டு வர முயற்சியுங்கள் ஒன் மேன் ஷோ இவ்வளவு பிரமாதமாக அமைந்தது எனக்கு இதுதான் முதல் தடவை. மனம் நிறைந்த நன்றிகள். யானைகளும் நன்றி சொல்லி இருக்கும்.////

நிச்சயம்... நிச்சயம்... செய்வோம்...

Unknown said...

அய்யா தாங்கள் விரும்பினால் என்
குறளை உபயே கப்படுத்தி கொள்ளலாம்
சித்தமாய் உள்லேன். நன்றி.
நட்புடன் நக்கீரன்.
nakkeeran7627@gmail.com