வானொலி நாடகம் என்பது கலையின் தனி வடிவம். ஊடகத்தின் ஒரு உட்பிரிவு. அதற்கு கதை வசனம் எழுதுவது ஒரு விதமான சவால். ஏனெனில் எல்லா விஷயங்களையும் வசனமாகவே சொல்ல வேண்டும்.
ஒரு கிராமம் என்பதை …… திரைப்படமாக, காட்சியாக சொல்லும் போது, 20 வினாடிகளில் ஒரு குளம், ஒரு வயல், ஒரு வீடு என படம் பிடித்து…. மிகவும் எளிமையாக சொல்லி விடலாம். அதே கிராமத்தை…. கதையாக எழுதும் போது, இரு பத்திகளில் வரிந்து வரிந்து எழுதி விடலாம்… ஆனால் ஒரு கிராமம் என்பதை வானொலியில் வெறும் ஒலியாக சொல்லும் போது…………. ஹூம்…. கொஞ்சம் கடினம் தான்….
வானொலி நாடகங்கள் ஒரு வித்தியாசமான தளம். அதன் நிறை குறை அறிந்து உணர்ந்து ரசித்தால் அது தரும் இன்பம் அலாதியானது. சென்னை வானொலி நிலையம் - தயாரித்த, எனது கதை வசனத்தில் உருவான 'ரகசியம் - வானொலி' நாடகம் இதோ உங்களுக்காக
No comments:
Post a Comment